search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் ஹோலி கொண்டாட்டம்
    X
    பாகிஸ்தானில் ஹோலி கொண்டாட்டம்

    பாகிஸ்தானில் வாழும் இந்து மக்களுக்கு இம்ரான் கான் ஹோலி வாழ்த்து

    ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களையொட்டி பாகிஸ்தானில் வாழும் இந்து மக்களுக்கு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    வண்ணமயமான உற்சாக திருவிழாவான ஹோலி பண்டிகையை பாகிஸ்தானில் வாழும் இந்து மக்கள் உற்சாகமாகவும், கோலாகலமாகவும் இன்று கொண்டாடி வருகின்றனர்.

    நாளையும் (செவ்வாய்க்கிழமை) அங்கு ஹோலி கொண்டாட்டங்கள் தொடரவுள்ள நிலையில் ஹோலி பண்டிகையையொட்டி பலூசிஸ்தான் மாகாண அரசு இருநாள் விடுமுறை அறிவித்துள்ளது.

     பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

    இந்த திருநாளையொட்டி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ’வண்ணங்களின் பண்டிகையான ஹோலியை எங்கள் இந்து சமுதாய மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தானில் சுமார் 75 லட்சம் இந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×