search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
    X
    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

    இந்திய பயணத்தை மீண்டும் புகழ்ந்து தள்ளிய டிரம்ப்

    இந்தியாவில் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது இந்திய பயணம் குறித்து அங்கு பல நிகழ்வுகளில் புகழ்ந்து வருகிறார்.
    வா‌ஷிங்டன்:

    இந்தியாவில் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது இந்திய பயணம் குறித்து அங்கு பல நிகழ்வுகளில் புகழ்ந்து வருகிறார். இதை அவர் நேற்று முன்தினமும் தொடர்ந்தார். குறிப்பாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியை வெகுவாக புகழ்ந்தார்.

    நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் மோடி, டிரம்ப்

    தெற்கு கரோலினாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும்போது இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இதை உங்களிடம் கூறுவதற்கு வெறுக்கிறேன். அதாவது இந்தியாவில் உண்மையில் அவர்களிடம் 1,29,000 இருக்கைகளை கொண்ட மைதானம் உள்ளது. நீங்கள் அதை பார்த்தீர்களா? அது முற்றிலும் நிரம்பி இருந்தது. அதைவிடவும் அதிகம் கூடினார்கள்’ என்று தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறும்போது, ‘இந்தியாவுக்கு சென்று வந்தபிறகு, ஒரு கூட்டத்தைப்பார்த்து நான் ஒருபோதும் உணர்ச்சி வசப்படமாட்டேன். இதை நினைத்துப்பாருங்கள், அவர்கள் 150 கோடி பேர், நாமோ 35 கோடி பேர். அதனால் நாமும் சிறப்பாக செயலாற்றினோம். ஆனால் உங்களிடம் நான் சொல்வது என்னவென்றால், நான் இந்த கூட்டத்தையும் நேசிக்கிறேன், அந்த கூட்டத்தையும் நேசிக்கிறேன். அதனால்தான் உண்மையிலேயே அது ஒரு பயனுள்ள பயணமாக இருந்தது’ என்றும் கூறினார்.

    இதைப்போல பிரதமர் மோடி ஒரு மிகப்பெரிய மனிதர் எனவும், இந்திய மக்கள் அவரை நேசிக்கிறார்கள் எனறும் புகழாரம் சூட்டினார்.
    Next Story
    ×