search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க கிருமி நாசினி தெளிக்கும் பணி
    X
    வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க கிருமி நாசினி தெளிக்கும் பணி

    தென் கொரியாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: நோயாளிகள் எண்ணிக்கை மூன்றாயிரத்தை நெருங்கியது

    சீனாவுக்கு வெளியே பிற நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென் கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மூன்றாயிரத்தை நெருங்கி உள்ளது.
    சியோல்:

    சீனாவில் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் இதுவரை 2835 பேர் பலியாகி உள்ளனர்.  தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் சீனாவில் கடந்த சில தினங்களாக இறப்பு விகிதம் குறையத் தொடங்கி உள்ளது. ஆனால், சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளில் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருவது கவலை அளிப்பதாக உள்ளது. 

    குறிப்பாக தென் கொரியா மற்றும் ஈரானின் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. தென் கொரியாவில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ள டீகு நகரத்தில் மேலும் 3 பேர் பலியானதையடுத்து, உயிரிழப்பு 16 ஆக உயர்ந்துள்ளது. 

    நேற்று மட்டும் 594 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், தென் கொரியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 2931 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
    Next Story
    ×