என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரான் - கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 26 பேர் பலி
Byமாலை மலர்27 Feb 2020 12:21 PM GMT (Updated: 27 Feb 2020 12:21 PM GMT)
ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 141 பேருக்கு கொரோனா பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தெஹ்ரான்:
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,807 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 82 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவை தொடர்ந்து தென்கொரியா மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
ஈரானில் இந்த நோயால் நேற்று வரை 19 பேர் உயிரிழந்தனர். வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 139 ஆக உயர்ந்திருந்தது. மேலும், அந்நாட்டு துணை சுகாதார மந்திரி இராஜுக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிப்பு எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×