search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இங்கு எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்... வருகிறது புதிய சட்டம்

    அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் ஆண் ஒரே நேரத்தில் எத்தனை பெண்களையும், ஒரு பெண் ஒரே நேரத்தில் எத்தனை ஆண்களையும் திருமணம் செய்து கொள்ள வகை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
    நியூயார்க்:

    ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரத்தை நாம் பின்பற்றினாலும், பல்வேறு நாடுகளில் அதுபோன்ற நடைமுறை இல்லை. ஆண் பல பெண்களையயும், பெண் பல ஆண்களையும் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருக்கிறது.

    இந்நிலையில் அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பெண் ஒரே நேரத்தில் எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம், ஒரு ஆண் ஒரே நேரத்தில் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

    ஆனால் ஒரு நிபந்தனை... திருமண உறவுகளில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே மற்றவர்களை திருமணம் செய்துகொள்ள முடியும்.

    பெண்ணோ அல்லது ஆணோ தங்கள் துணைக்கு தெரியாமல் செய்துகொள்ளும் திருமணங்கள் குற்றமாக கருதப்படும். பல திருமணங்கள் செய்வது, போக்குவரத்து விதி மீறல் போன்ற சிறிய குற்றமாகவே கருதப்படும். இந்த குற்றத்திற்கு பெரிய அளவில் தண்டனை கிடையாது. 750 டாலர் அபராதம்  மற்றும் சமூக சேவை ஆகிய தண்டனை வழங்க இந்த புதிய சட்டம் வகை செய்கிறது.

    தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, பலரையும் திருமணம் செய்து கொண்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அதை மாற்றி, நிபந்தனையுடன் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

    இந்த சட்ட மசோதாவுக்கு யூட்டா மாநில செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அது சட்டமாகும். பிரதிநிதிகள் சபையில் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×