search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம்ஸ் வீடியோ காட்சி.
    X
    டிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம்ஸ் வீடியோ காட்சி.

    டிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம்ஸ்- அவரே டுவிட்டரில் பகிர்ந்தார்

    நாளை இந்தியா வர இருக்கும் நிலையில் பாகுபலியாக சித்தரிக்கும் மீம்ஸ் வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக அகமதாபாத், டெல்லி, ஆக்ரா நகரங்கள் விழாக்கோலம் பூண்டு உள்ளது.

    டிரம்ப்பிற்கு வழங்க பல்வேறு தரப்பினரும் பரிசு பொருட்களை தயாரித்தும், அனுப்பியும் வருகின்றனர்.

    இந்தநிலையில் டிரம்ப்பை ‘பாகுபலியாக’ சித்தரிக்கும் மீம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

    டுவிட்டர் பயனாளரான ‘சோல்’ என்பவர் பாகுபலியில் இருக்கும் பிரபாஸ் முகத்திற்கு பதிலாக அதிபர் டிரம்ப் முகத்தை பொருத்தி மார்பிங் செய்துள்ளார். மேலும் டிரம்பின் மனைவி மெலானியா, பிரதமர் மோடிக்கு சில பாத்திரங்கள் உள்ளன.

    93 வினாடிகள் ஓடும் இந்த மீம்ஸ் வீடியோவை டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் ரீடுவிட் செய்து இந்தியாவின் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த பாகுபலி மீம்ஸ் வீடியோவை சில மணி நேரத்தில் 6 லட்சம் பேர் வரை பார்த்துள்ளனர்.

    டிரம்ப்பை வைத்து இதுவரை ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் வந்துள்ளன. இந்த பாகுபலி வீடியோவை டிரம்ப் பகிர்ந்ததற்கு பல அமெரிக்கர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×