search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடம்
    X
    நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடம்

    ஈரான் எல்லையில் நிலநடுக்கம்: 8 பேர் பலியானதாக துருக்கி தகவல்

    ஈரான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வான் மாகாணத்தில் நிலநடுக்கம் காரணமாக 8 பேர் உயிரிழந்ததாக துருக்கி தெரிவித்துள்ளது.
    துருக்கி - ஈரான் எல்லையில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஈரான் கிராமமான ஹபாஷ்-இ-ஒலியா என்ற இடத்தை மையமாக கொண்டு இன்று காலை 9.23 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் ஈரான் எல்லையில் உள்ள துருக்கியின் வான் மாகாணத்தின் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் மூன்று பேர் குழந்தைகள் என துருக்கி உள்துறை மந்திரி சுலேமான் சோய்லு தெரிவித்துள்ளார். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

    21 பேர் காயம் அடைந்துள்ளனர். அதில் 8 பேர் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

    இந்த விபத்தில் ஈராக்கில் 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும், பல வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாதம் தொடக்கத்தில் இரண்டு நிலச்சரிவு காரணமாக வான் மாகாணத்தில் 41 பேர் உயிரிழந்தனர். கடந்த 2011-ம் ஆண்டு வான் மற்றும் எரிக்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 
    Next Story
    ×