search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முகமூடி அணிந்துள்ள மக்கள்
    X
    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முகமூடி அணிந்துள்ள மக்கள்

    கொரோனா வைரஸ் தாக்குதல் - பலி எண்ணிக்கை 2,442 ஆக உயர்வு

    சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 2442 ஆக அதிகரித்துள்ளது.
    பீஜிங்:

    சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 27 நாடுகளுக்கும் மேல் இந்த வைரஸ் பரவி உள்ளதால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. 

    கொரோனா வைரஸ் சீனாவில் மிகவும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 2,345க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்நிலையில், சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 2442 ஆக உயர்ந்துள்ளது என அம்மாகாண சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.

    சீனா முழுவதும் 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே, சீனா சென்றுள்ள உலக சுகாதார அமைப்பு குழுவினர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டனர்.
    Next Story
    ×