search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யும் சுகாதார ஊழியர்கள்
    X
    பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யும் சுகாதார ஊழியர்கள்

    கொரோனா வைரஸ்- சீனாவில் மேலும் 109 பேர் பலி

    சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று மேலும் 109 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 2345 ஆக உயர்ந்துள்ளது.
    பீஜிங்:

    சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரசுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்தபடி உள்ளது. வைரசை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. 

    இந்நிலையில் சீனாவில் நேற்று மேலும் 109 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2345 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். 

    மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்

    ஒட்டு மொத்தமாக 76 ஆயிரத்து 288 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நேற்று புதிதாக 397 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

    கொரோனா வைரஸ் தாக்குதல் பெரிய அளவில் இருந்து குறைய தொடங்கியுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×