search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சீனாவை தொடர்ந்து தென்கொரியாவை மிரட்டும் கொரோனா வைரஸ்

    சீனாவை தொடர்ந்து, தென்கொரியாவை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. இதன் மூலம் ஜப்பானை தொடர்ந்து, சீனாவுக்கு வெளியே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தென்கொரியா மாறியுள்ளது.
    சியோல் :

    சீனாவில் கொரோனா வைரஸ் நோய்க்கு ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதால் பலி எண்ணிகை 2 ஆயிரத்து 232 ஆக அதிகரித்து இருக்கிறது. அதே சமயம் சீனாவில் கொரோனா வைரசின் வீரியம் முன்பை விட குறைய தொடங்கி இருக்கிறது. நோய் தாக்கம் தொடங்கியது முதல் நேற்று முன்தினம் வரை 18 ஆயிரத்து 264 பேர் நோயில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 75 ஆயிரத்து 465 பேருக்கு தொடர்ந்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே சீனாவை தொடர்ந்து, தென்கொரியாவை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. சீனாவில் இருந்து 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவியிருந்தாலும் தென்கொரியாவில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

    அந்த நாட்டின் கியோங்சாங் மாகாணத்தின் தலைநகர் தேகுவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் கடந்த புதன்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதன் காரணமாக அங்கு கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதனால் அந்த நாட்டில் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஜப்பானை தொடர்ந்து, சீனாவுக்கு வெளியே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தென்கொரியா மாறியுள்ளது.
    Next Story
    ×