search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷவாயு தாக்கி பாதிப்பு அடைந்த மக்கள்
    X
    விஷவாயு தாக்கி பாதிப்பு அடைந்த மக்கள்

    வி‌‌ஷ வாயு தாக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு - பாகிஸ்தானில் சோகம்

    பாகிஸ்தானில் கன்டெய்னரில் இருந்த வி‌‌ஷ வாயு தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
    கராச்சி:

    பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள கேமாரி துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் இரவு சரக்கு கப்பல் ஒன்று வந்தது.

    அந்த கப்பலில் கொண்டு வரப்பட்ட காய்கறிகள் நிரப்பப்பட்ட கன்டெய்னரை ஊழியர்கள் இறக்கினர். அதன்பின் அந்த கன்டெய்னர் அருகில் உள்ள சந்தைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு காய்கறிகளை தரம் பிரித்து, கடைகளுக்கு கொடுப்பதற்காக ஊழியர்கள் கன்டெய்னரை திறந்தனர்.
     
    அப்போது கன்டெய்னரில் இருந்து வி‌‌ஷ வாயு வெளியேறியது. வி‌‌ஷ வாயு தாக்கியதில் சுமார் 30 பேர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி சுருண்டு விழுந்தனர்.

    சுயநினைவை இழந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் 23 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், பாகிஸ்தானில் கன்டெய்னரில் இருந்த வி‌‌ஷ வாயு தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். விஷ வாயு தாக்கியது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×