search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர்
    X
    மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர்

    துருக்கி விமான விபத்தில் 3 பேர் பலி- 179 பேர் காயம்

    துருக்கியில் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி, மூன்று துண்டுகளாக உடைந்ததில் 3 பயணிகள் உயிரிழந்தனர்.
    இஸ்தான்புல்:

    துருக்கியின் ஏஜியன் நகரில் இருந்து தலைநகர் இஸ்தான்புல் சபிகா காக்சன் விமான நிலையத்திற்கு நேற்று ஒரு பயணிகள் விமானம் (போயிங் 737) வந்தது. பெகாசஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அந்த விமானம், இஸ்தான்புல் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது. 

    ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு வேகமாக சென்ற விமானம், பின்னர் ஓடுபாதையைவிட்டு விலகி தரையில் மோதி மூன்றாக உடைந்துள்ளது. அத்துடன் விமானத்தின் உட்பகுதியில் தீப்பிடித்துள்ளது. இதனால் பயணிகள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

    விபத்துக்குள்ளான விமானம்

    மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக ஓடுபாதைக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விமானம் உடைந்த பகுதி வழியாக பயணிகள் மீட்கப்பட்டனர். 

    இந்த விபத்தில் துருக்கியைச் சேர்ந்த 3 பயணிகள் உயிரிழந்ததாகவும், 179 பேர் காயமடைந்ததாகவும் சுகாதாரத்துறை மந்திரி கூறி உள்ளார். விமானத்தில் மொத்தம் 177 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள என மொத்தம் 183 பேர் பயணம் செய்தாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    விமான விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×