என் மலர்

  செய்திகள்

  சுரங்க தொழிலாளர்
  X
  சுரங்க தொழிலாளர்

  தென்ஆப்பிரிக்காவில் சுரங்க தொழிலாளர்கள் 9 பேர் கல்லால் அடித்துக்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்ஆப்பிரிக்காவில் சுரங்க தொழிலாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் 9 பேர் கல்லால் அடித்தே கொலை செய்யப்பட்டிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
  கேப்டவுன்:

  தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் சட்டவிரோதமான முறையில் ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுரங்கங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

  இந்த சட்ட விரோத சுரங்கங்களுக்கு இடையே கடுமையான தொழில் போட்டி நிலவுகிறது. இதனால் ஒரு சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மற்றொரு சுரங்கத்தின் தொழிலாளர்களுடன் மோதலில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது.

  இந்த நிலையில், ஜோகன்னஸ்பெர்க்கில் லெசோதோ என்ற இடத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் சோதனை நடத்த போலீசார் சென்றனர். அப்போது சுரங்கம் அமைந்துள்ள வீதியில் 9 பேர் பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ந்தனர்.

  அவர்கள் சட்ட விரோத நிலக்கரி சுரங்கத்தின் தொழிலாளர்கள் என்பதும், அவர்கள் அனைவரும் கல்லால் அடித்தே கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. எனினும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது யார் என்பது தெரியவில்லை.

  உலகிலே அதிக அளவில் வன்முறை நடக்கும் நாடுகளில் தென்ஆப்பிரிக்காவும் ஒன்று. அந்த நாட்டு அரசு தகவல்களின்படி அங்கு ஒரு நாளுக்கு 58 கொலைகள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
  Next Story
  ×