என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 11 தலிபான்கள் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாதிகள் 11 பேர் உயிரிழந்தனர்.
  காபுல்:

  ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. 

  இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்திவருகின்றனர். 

  ராணுவத்தினரின் தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகளும் அவ்வப்போது பதில் தாக்குதல் நடத்திவருகின்றனர். 

  இதற்கிடையில் தலிபான் பயங்கரவாதிகள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் சமீபகாலமாக அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பல கிராமங்களை மீட்டுவருகின்றனர்.

  இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு உருஹன் மாகாணம் டிரின் கோட் பகுதியில் நேற்று நள்ளிரவு பாதுகாப்புப்படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

  இந்த தாக்குதல் சம்பவத்தில் தலிபான் பயங்கரவாதிகள் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், பயங்கரவாதிகள் பதுக்கிவைத்திருந்த வெடிபொருட்களும் பயங்கர ஆயுதங்களையும் பாதுகாப்புப்படையினர் கைப்பற்றி அழித்தனர்.
  Next Story
  ×