என் மலர்

  செய்திகள்

  சுகோய் சூ-30 ரக ராணுவ விமானம்
  X
  சுகோய் சூ-30 ரக ராணுவ விமானம்

  அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது - 2 விமானிகள் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அல்ஜீரியாவில் சுகோய் சூ-30 ரக ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்
  அல்ஜியர்ஸ்:

  ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அவும் அல் புவாஹி மாகாணத்தில் இருக்கும் ராணுவ விமான தளத்தில் இருந்து சுகோய் சூ-30 ரக ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 2 விமானிகள் இருந்தனர்.

  புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் விமான தளத்துக்கு அருகிலேயே விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி னர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.

  எனினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  கடந்த 2018-ம் ஆண்டு தலைநகர் அல்ஜியர்சில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இருந்து ராணுவவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்ற ராணுவ விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கி விமானத்தில் இருந்த 257 பேரும் பலியானது நினைவுகூரத்தக்கது.
  Next Story
  ×