search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இம்ரான்கான்
    X
    இம்ரான்கான்

    செய்தித்தாள் வாசிப்பதையும், டி.வி. விவாத நிகழ்ச்சிகள் பார்ப்பதையும் நிறுத்திவிட்டேன் - இம்ரான்கான் புலம்பல்

    மிகுந்த எதிர்மறை கருத்துக்களை கொண்டு தன்னை குறிவைத்து தாக்குவதால் செய்தித்தாள் வாசிப்பதையும், டி.வி.களில் விவாத நிகழ்ச்சிகள் பார்ப்பதையும் நிறுத்திவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
    டாவோஸ்:

    உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் 50-ம் ஆண்டு பொருளாதார உச்சிமாநாடு ஜனவரி 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

    இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இந்த பொருளாதார உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பங்கேற்றார். 

    இந்த கூட்டத்திற்கு பின்னர் உலகின் முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களுடன் இம்ரான்கான் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

    அந்த நிகழ்ச்சியில் இம்ரான்கான் பேசியதாவது:-

    நீங்கள் ஒரு கல்வி நிறுவனத்தை உடனடியாக அழித்துவிடலாம் ஆனால் அதை சீரமைப்பதற்கு அதிக காலம் தேவைப்படும். பாகிஸ்தானில் அதிகமான கல்வி நிறுவனங்கள் உள்ளது. ஆனால் அங்கு இருப்பவர்கள் பலர் சரியான பின்புலம் இல்லாமலும், வேலை இல்லாமல் உள்ளனர்.

    கோப்பு படம்

    நீங்கள் சாகாமல் சொர்க்கம் செல்லவேண்டும் என்பது போன்ற நிலைதான் தற்போது நிலவிக்கொண்டிருக்கிறது. இது ஒரு மோசமான எடுத்துக்காட்டாக மாறிவிடும். நீங்கள் உங்கள் மூளையில் உள்ள கட்டியை அகற்றவேண்டும் என நினைக்கிறீர்கள். 

    ஆனால் அந்த சிகிச்சையின்போது வலிக்கக்கூடாது என நினைக்கின்றீர்கள். பாகிஸ்தான் தற்போது மிகவும் கடினமான காலத்தை எதிர்நோக்கியுள்ளது. அவை குறுகிய காலம்தான். அதற்கு பின்னர் நல்ல காலம் உள்ளது என்பதை நான் உறுதியளிக்கிறேன்.

    எனது 40 வருட பொதுவாழ்வில் நான் விமர்சனங்களை சந்தித்துள்ளேன். ஆனால் கடந்த ஒன்றரை வருடங்களில் ஊடகங்களால் நான் மிகவும் கடுமையாக எதிர்மறை தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளேன். 

    ஆகையால், செய்தித்தாள்கள் வாசிப்பதையும், டி.வி. விவாத நிகழ்ச்சிகளை பார்ப்பதையும் நிறுத்திவிட்டேன். எனது அதிகாரிகள் அந்த நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு என்னிடம் வந்து கூறுவார்கள்.

    இறுதியாக நான் சொல்வது என்னவென்றால் அமைதியாக இருங்கள் என்பதுதான். மிகுந்த தைரியமும், அரசியல் ஆர்வமும் இருந்தால் மட்டுமே விமர்சனங்களை தாங்கிக்கொண்டு வெற்றியடைய முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×