search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கதர்னி செகலாரோப்லூ
    X
    கதர்னி செகலாரோப்லூ

    கிரீஸ் நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக பெண் அதிபராக தேர்வு

    கிரீஸ் நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக கதர்னி செகலாரோப்லூ என்ற பெண் அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    ஏதென்ஸ்:

    ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடு கிரீஸ் குடியரசு (கிரேக்கம்). ஜனநாயக நாடாக அங்கிகரிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த பின்னரும் இதுவரை அந்நாட்டின் அதிபராக ஒரு பெண் கூட தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.

    இந்நிலையில், கிரீஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக கதர்னி செகலாரோப்லூ (63) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்நாட்டு நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ள இவரை அந்நாட்டு பிரதமர் க்ரியாகோஷ் மிட்சோடகிசின் அதிபர் பதவிக்கு பரிந்துரை செய்தார். 

    இதையடுத்து கதர்னியை கிரீஸ் அதிபராக தேர்ந்தெடுப்பது தொடர்பாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. 300 எம்.பி.க்கள் அடங்கிய பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் உள்பட 261 எம்.பி.க்கள் கதர்னிக்கு ஆதரவாக வாக்களித்தனர். 

    கிரீஸ் குடியரசின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கதர்னி செகலாரோப்லூ வரும் மார்ச் 13-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அதிபர் பதவியேற்க உள்ளார்.

    தற்போது கிரீஸ் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கதர்னி அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×