search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷியா
    X
    ரஷியா

    கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் - ரஷியா

    புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் ரஷியாவில் பரவினால் அதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தது 6 மாதங்களாவது ஆகும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    மாஸ்கோ:

    சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. சுவாசக்கோளாறுகள் ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் இந்த வைரசினால் இதுவரை சீனாவில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளிலும் இந்த வைரசின் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    புதிய கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்களது நாடுகளில் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் ரஷியாவில் பரவினால் அதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தது 6 மாதங்களாவது ஆகும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ‘கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பூசியை உருவாக்குவது மிகவும் எளிதானது என்றாலும், அதற்கு நிறைய நிதி ஒதுக்கப்பட வேண்டும். அனைத்து சோதனை காலங்கள் உட்பட தடுப்பூசியை உருவாக்கும் முழு செயல்முறைக்கும் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது ஆகும்.

    இந்த வைரஸ் நம் மக்களிடையே எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நமக்கு தெரியாது. மக்களிடையே எளிதில் பரவுவது மரபியலைப் பொருத்தது. ஆனால் கொரோனா வைரஸ் அதிக எண்ணிக்கையில் ஆபத்தான விளைவுகளுடன் ரஷியாவில் பரவத் தொடங்கினால், இந்த தடுப்பூசி நமக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்’ என ரஷிய சுகாதார துறை அமைச்சகத்தின் துணை இயக்குநர் ஷிபுலின் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×