search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாய்க்கவசம் அணிந்த சீனா மக்கள்
    X
    வாய்க்கவசம் அணிந்த சீனா மக்கள்

    சீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்

    சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 9 பேர் பலியானதை அடுத்து, அந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
    பீஜிங்:

    ‘கொரோனா வைரஸ்’ என கருதப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல், இவ்வாண்டின் தொடக்கம் முதல் சீனாவில் பரவி வருகிறது. முதலில், சீனாவின் மத்திய நகரான வுகானில் இந்த மர்ம வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் தாக்கியவர்கள், கடுமையான சுவாசப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். 

    மனிதர்களிடமிருந்தே மனிதர்களுக்கு பரவும் இந்த காய்ச்சலுக்கு சீனாவில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா முழுவதும் 440 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதிய கொரோனா வைரஸின் மூலத்தை கண்டறியுமாறு சீனா அரசை வலியுறுத்திய உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் காய்ச்சலை, சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை அறிவிக்கலாமா என்பதை தீர்மானிக்க ஒரு முக்கிய அவசர குழு கூட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தது. மேலும் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களை எவ்வாறு கண்டறிந்து சிகிச்சையளிப்பது என்பது குறித்த வழிகாட்டுதலையும் வெளியிட்டது.

    டிஜிட்டல் முறையில் படப்பிடிக்கப்பட்ட மெர்ஸ் வகை கொரொனோ வைரஸ் (மாதிரிப்படம்)

    இந்நிலையில், இந்த வைரஸ் மாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என சீனா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ‘இந்த நோய் சுவாசக்குழாய் வழியாக பரவுகிறது, மேலும் வைரஸ் மாற்றம் அடைந்து, நோய் மற்ற நாடுகளுக்கு பரவுவதற்கான சாத்தியம் உள்ளது. நோயின் மூலத்தையும், பரவலையும் கண்டறிவதற்கான ஆராய்ச்சி முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்வோம்’ என தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் லி பின் பீஜிங்கில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

    சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பான், வட கொரியா, தைவான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×