என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறைச்சாலைக்குள்ளேயே சுரங்கப்பாதை அமைத்து தப்பிச்சென்ற கைதிகள் - பராகுவேவில் பரபரப்பு
Byமாலை மலர்20 Jan 2020 12:29 PM GMT (Updated: 20 Jan 2020 2:44 PM GMT)
பராகுவே நாட்டில் உள்ள சிறைச்சாலையில் இருந்து மிகவும் அபாயகரமானவர்கள் என்ற பட்டியலில் இருந்த கைதிகள் 76 பேர் சுரங்கப்பாதை அமைத்து தப்பிச்சென்றனர்.
அசுன்சியோன்:
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பராகுவே. இந்நாடு பிரேசில் நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ளது.
அந்நாட்டின் பெட்ரொ ஜுயன் கபரிரோ என்ற நகரில் ஒரு சிறைச்சாலை அமைந்துள்ளது.
அந்த சிறைச்சாலையில் உள்நாடு மற்றும் அண்டை நாடான பிரேசில் ஆகியவற்றில் கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த சிறைச்சாலைக்குள்ளேயே சுரங்கம் அமைத்து கைதிகள் 76 பேர் (40 பிரேசில் நாட்டினர், 36 பராகுவே நாட்டினர்) தப்பிச்சென்றுள்ளனர்.
கைதிகள் தாங்கள் அமைத்த சுரங்கத்தில் எடுத்த மணலை மூட்டைகளாக கட்டி சிறையில் உள்ள ஒரு அறைக்குள் மறைத்து வைத்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
தப்பிச்சென்ற கைதிகள் அனைவரும் பிரேசில் மற்றும் பராகுவே நாட்டில் போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றச்செயல்களில் ஈடுபட்ட மிகவும் அபாயகரமானவர்கள் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சம்பவத்தை தொடர்ந்து அந்த சிறை கண்காணிப்பாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறைக்காவலர்கள் சிலரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் கைதிகள் சிறையில் இருந்து தப்பிச்சென்றது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.
Next Story
×