search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் மல்லையா
    X
    விஜய் மல்லையா

    விஜய் மல்லையாவின் சொகுசு பங்களாவை விற்க அனுமதி கோரி கோர்ட்டில் வழக்கு

    விஜய் மல்லையாவின் 17 அறைகள் கொண்ட சொகுசு பங்களாவை விற்க அனுமதி வழங்க வேண்டும் என்று அவருக்கு கடன் கொடுத்த நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
    லண்டன்:

    பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா பல்வேறு வங்கிகளிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்கினார். ஆனால் கடனை செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    விஜய் மல்லையா பல்வேறு நிறுவனங்களிடம் இருந்தும் கடன் வாங்கி உள்ளார். அதுபோன்று கோடிக்கணக்கில் கடன் வாங்கிய பிரான்ஸ் நாட்டின் ‘லி செயிடன்ட் மார்கரெட்’ தீவில் 17 அறைகள் கொண்ட சொகுசு பங்களாவை வாங்கினார்.

    ஆனால் கடன் தொகையை திரும்பி செலுத்தவில்லை. இதையடுத்து அவருக்கு கடன் கொடுத்த கத்தார் தேசிய வங்கியின் துணை நிறுவனமான அன்ஸ்பச்சர் நிறுவனம் லண்டன் கோர்ட் டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு விசாரணையின்போது அன்ஸ்பக்சர் நிறுவனம் சார்பில் வக்கீல் கூறும்போது, “விஜய் மல்லையா ரூ.280 கோடி கடனை பெற்ற பிரான்சின் தீவில் ‘லீ கிராண்ட் ஜார்டின்’ என்ற பிரமாண்ட மாளிகையை வாங்கினார்.

    அந்த சொகுசு பங்களாவில் 17 படுக்கை அறைகள், ஒரு சினிமா தியேட்டர், மதுபானக் கூடம், ஹெலிகாப்டர் தளம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன.

    இந்த சொகுசு மாளிகையை விஜய் மல்லையா பராமரிக்காமல் விட்டு விட்டார். இதை அவர் வேண்டுமென்றே செய்துள்ளார். தகுதியில்லாத நபர்களால் செய்த மராமத்து பணிகளால் மாளிகை மேலும் பாழாகிவிட்டது. இதனால் அந்த சொகுசு பங்களாவின் மதிப்பு 30 சதவீதம் குறைந்து விட்டது.

    இதனால் பங்களாவை விற்றாலும் கடன் தொகையை முழுவதும் வசூலிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே கடனுக்கு உத்தரவாதமாக விஜய் மல்லையா வழங்கிய இங்கிலாந்தில் உள்ள சொகுசு படகை விற்று, அந்த தொகையை பெற்று கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    விஜய் மல்லையாவின் சொகுசு படகில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளம் தராததால் அந்த படகை காப்பீட்டு நிறுவனம் முடக்கி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×