search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ ஹெலிகாப்டர்
    X
    ராணுவ ஹெலிகாப்டர்

    ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து - 2 விமானிகள் பலி

    ஆப்கானிஸ்தானில் ராணுவத்துக்கு சொந்தமான ‘எம்ஜ-35’ ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் பலியானார்கள்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பாரா மாகாணத்தின் தலைநகர் பாராவில் இருந்து அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘எம்ஜ-35’ ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. ஹெலிகாப்டரில் 2 விமானிகள் மட்டும் இருந்தனர்.

    புர்ஜாமான் மாவட்டத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டரில் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்
    Next Story
    ×