search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாங்காங் போராட்டம்
    X
    ஹாங்காங் போராட்டம்

    ஹாங்காங் - புத்தாண்டு தினத்தன்றும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

    ஹாங்காங்கில் புத்தாண்டு தினத்தன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஹாங்காங்:

    ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இதை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் கடந்த 5 மாதங்களாக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
     
    கைதி பரிமாற்ற சட்ட மசோதாவை ரத்து செய்தல், ஹாங்காங் அரசியலில் சீனா தலையிடுவதை நிறுத்த வேண்டும், சுதந்திரமான தேர்தல், போலீசாரால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்தல், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் குறித்து விசாரணை மேற்கொள்ளுதல் வேண்டும் என்ற கோரிக்கைகளோடு இந்த போராட்டம் தொடங்கப்பட்டது. 

    வார இறுதி நாட்களில் நடைபெற்று வந்த போராட்டம் நாளடைவில் தினமும் நடைபெற்று வருகிறது. புதிய சட்ட மசோதாவை கைவிடுவதாக ஹாங்காங் நிர்வாகம் அறிவித்த போது, சீனாவிடம் இருந்த சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், ஹாங்காங்கில் புத்தாண்டு தினத்தன்றும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பிரம்மாண்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

    பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
    Next Story
    ×