search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷிய அதிபர் புதின்
    X
    ரஷிய அதிபர் புதின்

    20 ஆண்டுகளாக பிரதமர் அல்லது அதிபர்... புதினின் ரஷியா...

    விளாடிமிர் புதின் ரஷியாவின் பிரதமர் அல்லது அதிபர் ஆகிய பதவி வகித்து 20-வது ஆண்டுடில் அடியெடுத்து வைக்கிறார்.
    மாஸ்கோ:

    ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் கேஜிஎப் எனப்படும் உளவு அமைப்பில் தனது வாழ்க்கையை தொடங்கியவர் விளாடிமிர் புதின். 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி ரஷியா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது அப்போதைய அதிபர் எல்ட்சின் பொறுப்பு பிரதமராக விளாடிமிர் புதினை முதல் முறையாக நியமனம் செய்தார். 

    அந்த சமயம் அந்நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாக கருதப்பட்ட பகுதிகளில் வான்வெளி மூலம் குண்டுகள் வீசப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கைகளால் புதின் ரஷிய மக்களிடையே புகழ்பெற்றார்.

    இதையடுத்து, பல காரணங்களுக்காக அதிபராக இருந்த எல்ட்சின் தனது பொறுப்பை ராஜினாமா செய்து 1999-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி விளாடிமிர் புதினை ரஷியாவின் பொறுப்பு அதிபராக நியமணம் செய்தார். 

    அப்போது முதல் ரஷியாவின் அதிபர் அல்லது பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதேனும் ஒன்றில் தன்னை நிலைநிறுத்திவந்த புதின் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்றார். இதனால் 2024-வரை ரஷியாவில் புதினின் ஆதிக்கம் இருக்கும்.   

    ரஷிய அதிபர் புதின்

    இந்நிலையில், தான் பொறுப்பு அதிபராக பதவியேற்று  ரஷியாவின் பிரதமர் அல்லது அதிபர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதேனும் ஒன்றில் தன்னை நிலைநிறுத்தி வரும் விளாடிமிர் புதின் 31.12.2019 அன்று (செவ்வாய் கிழமை) 20-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். 

    உலகின் சக்தி மிகுந்த நபராக இருக்கும் விளாடிமிர் புதின் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். அதிரடி முடிவுகள், அணு ஆயுத வல்லமை என அனைத்து பிரிவுகளிலும் உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழும் புதின் 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் மறைமுகமாக தலையிட்டார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பான்மை பலத்துடன் ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராவார் என கணிக்கப்பட்டது. 

    ஆனால், ஹிலாரி கிளிண்டனுடனான மோதல் சம்பவத்தை கருத்தில் கொண்டு அவரை தோல்வியடைய செய்ய ரஷிய அதிபர் புதின் அமெரிக்க தேர்தலில் தலையிட்டு டொனால்டு டிரம்பை வெற்றிபெற செய்தார் என பரவலான கருத்துக்கள் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×