search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்
    X
    வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்

    வடகொரியாவில் மீண்டும் ஏவுகணை தொழிற்சாலை- அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

    ஒப்பந்தத்தை மீறி மூடியிருந்த ஏவுகணை தொழிற்சாலையை வடகொரியா தொடங்கி உள்ளது.

    சியோல்:

    வடகொரியா அடிக்கடி ஏவுகணை மற்றும் அணு குண்டு சோதனைகளை நடத்தி வந்தது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா. ஆதரவுடன் வட கொரியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.

    இதனால் வடகொரியா- அமெரிக்காவுக்கு இடையே போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. பதட்டத்தை தணிக்க வடகொரியா அதிபர் கிம்ஜாங்-யங்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் 2 தடவை சந்தித்து பேசினார்கள். இதனால் ஒப்பந்தம் ஏற்பட்டது.

    வட கொரியா ஏவுகணை சோதனை நடத்துவதையும் அணு ஆயுதங்கள் தயாரிப்பதையும் நிறுத்தி வைத்தது. கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் ஓய்ந்து அமைதி நிலவுகிறது.

    கொரிய கடல் பகுதியில் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க ராணுவம் கூட்டு போர் பயிற்சி நடத்த முடிவு செய்தது. கொரிய கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து முகாமிட்டுள்ளது.

    இதனால் வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை தொடங்கி நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் மூடியிருந்த ஏவுகணை தொழிற்சாலையை வடகொரியா தொடங்கி உள்ளது. அங்கு நீண்டதூரம் மற்றும் குறுகிய தூரம் பாய்ந்து சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.

    இதற்காக தங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அமெரிக்காவுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வழங்குவோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் அங்கு ஏவுகணை தொழிற்சாலை அமைக்கப்பட்டிருப்பதை தென்கொரியா போட்டோ எடுத்துள்ளது. செயற்கை கோள் எடுத்த போட்டோவும் வெளியிடப்பட்டுள்ளது.

    ஏவுகணைகளை செலுத்தக் கூடிய 8 வாகனங்களை 2017-ம் ஆண்டு முதல் வடகொரியா இறக்குமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    Next Story
    ×