search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஷ்ரப் கானி
    X
    அஷ்ரப் கானி

    ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி

    ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 50.64 சதவீதம் வாக்குகளை வாங்கி அதிபர் அஷ்ரப் கானி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் அதிபர் அஷ்ரப் கானி 9 லட்சத்து 23 ஆயிரத்து 868 (50.64 சதவீதம்) வாக்குகளை வாங்கி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

    அப்துல்லா அப்துல்லா

    அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா அப்துல்லா 39.52 சதவீதம் வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.
    Next Story
    ×