search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்டோபசிடம் சிக்கிய கழுகு
    X
    ஆக்டோபசிடம் சிக்கிய கழுகு

    ஆக்டோபசை பிடிக்க முயன்று வசமாக சிக்கிய கழுகு

    கனடாவில் ஆக்டோபஸ் ஒன்றை பிடிக்கும் முயற்சியில் ஆக்டோபசின் மரணப்பிடியில் சிக்கிய கழுகை, படகில் சென்ற மீனவர்கள் விடுவித்தனர்.
    ஒட்டாவா:

    கழுகுகள் பொதுவாக கடலின் மேற்பரப்பில் பறந்து தக்க தருணம் பார்த்து மீனை கொத்திச் செல்லும். ஆனால் ஆக்டோபசை உணவாக கொத்திப்பிடிக்க முயன்ற கழுகு ஒன்று ஆக்டோபசிடம் சிக்கிய வினோத சம்பவம் கனடாவில் நிகழ்ந்துள்ளது.

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் கடற்கரையை ஒட்டிய கழிமுக பகுதியில் ஏராளமான கடல்வாழ் விலங்குகள் உள்ளன. அப்பகுதி மீனவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) அப்பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது நீரின் மேற்பரப்பில் பறந்து வந்த கழுகு கடலில் நீந்திக்கொண்டிருந்த ஆக்டோபசை பிடிக்க முயன்றது.

    ஆனால் ஆக்டோபஸ் கழுகை தன் கைகளால் மடக்கி பிடித்தது. இருப்பினும் ஆக்டோபஸ் கழுகை நீரினுள் இழுக்கவில்லை. கழுகு எவ்வளவோ முயற்சித்தும் ஆக்டோபஸ் பிடியில் இருந்து விடுபடமுடியவில்லை.

    இதனைப்பார்த்த அந்த மீனவர்கள் தாங்கள் வைத்திருந்த ஈட்டியால் ஆக்டோபசின் கைகளை குத்தி அந்த கழுகை விடுவித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
    Next Story
    ×