search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தயிப் எர்டோகன்
    X
    தயிப் எர்டோகன்

    அமெரிக்க ராணுவ தளங்கள் மூடப்படும் - துருக்கி அதிபர் எச்சரிக்கை

    துருக்கி மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால் அங்கு செயல்பட்டு வரும் இரு அமெரிக்க ராணுவ தளங்கள் மூடப்படும் என அந்நாட்டு அதிபர் தயிப் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    அங்காரா:

    துருக்கியின் இன்கிர்லிக் மற்றும் குரேசிக் பகுதிகளில் அமெரிக்கா விமானப்படைக்கு சொந்தமான ராணுவ தளமும்,  வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டு ராணுவப் படையான நேட்டோவின் ரேடார் தளமும் இயங்கி வருகிறது.

    சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்குள்ள குர்து பகுதிகள் துருக்கி மற்றும் ரஷியா கட்டுப்பாட்டிற்குள் வந்தன. இதையடுத்து துருக்கியும் ரஷியாவும் நட்பு பாராட்டி வந்தன. ரஷிய ராணுவ போலீசார் அப்பகுதிகளில் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

    இதற்கிடையே, ரஷியாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க துருக்கி முடிவு செய்தது. ஆனால் துருக்கியின் இந்த முடிவிற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அச்சுறுத்தியது.

    இந்நிலையில், துருக்கி மீது பொருளாதார தடைகள் விதித்தால் இன்கிர்லிக் மற்றும் குரேசிக் பகுதிகளில் செயல்பட்டு வரும்  அமெரிக்க ராணுவ தளங்கள் மூடப்படும் என அந்நாட்டு அதிபர் தாயீப் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×