search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எரிமலை வெடித்தபோது எடுத்தப் படம்
    X
    எரிமலை வெடித்தபோது எடுத்தப் படம்

    நியூசிலாந்து எரிமலை வெடிப்பு - பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

    நியூசிலாந்து நாட்டின் வெள்ளைத் தீவில் எரிமலை வெடிப்பில் காயமடைந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 18 ஆக உயர்ந்தது.
    வெலிங்டன்:

    நியூசிலாந்து நாட்டின் வகாடனே நகரில் இருந்து கடலுக்குள் சுமார் 50 கி.மீ தொலைவில் வெள்ளைத் தீவு உள்ளது. இந்த தீவில் சில எரிமலைகள் உள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலாப்பயணிகள் எரிமலையை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில், கடந்த 9-ம் தேதி வெள்ளைத் தீவில் உள்ள எரிமலைகளில் ஒன்று திடீரென இன்று வெடித்ததில் அங்கு சென்றிருந்த சுற்றுலாப்பயணிகள் பலர் காயமடைந்தனர். மேலும் பலரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    தேடுதல் பணியில் மீட்பு படையினர்

    பின்னர் மீட்புப் பணியினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரமான தீக்காயங்களுடன் 40-க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் எரிமலை வெடித்த இடத்தில் சில பிரேதங்களும் கண்டெடுக்கப்பட்டன.

    இந்நிலையில், தீக்காயங்களுக்காக சிகிச்சை பெற்றுவந்த சிலர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக
    காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், எரிமலையின் அருகாமையில் உள்ள அருவியில் விழுந்து அடித்துச் செல்லப்பட்ட இரு பிரேதங்கள் கடலில் கலந்திருக்கலாம் என கருதப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
    Next Story
    ×