search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிளர்ச்சியாளர்கள் (கோப்பு படம்)
    X
    கிளர்ச்சியாளர்கள் (கோப்பு படம்)

    காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 17 பேர் பலி

    காங்கோ நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் உயிரிழந்தனர்.
    கின்ஷாசா:

    மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் பல ஆண்டுகளாக  உள்நாட்டுப்போர் நடைபெற்றுவருகிறது. இதனால், அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவெடுத்துள்ளது. 

    இந்த கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். 

    இந்த குழுக்களை ஒழிக்கவும், நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை மீட்டு அமைதியை ஏற்படுத்தவும் உள்நாட்டுப்படையுடன் இணைந்து ஐநா படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், அந்நாட்டின் ஐட்டுரி மாகாணத்தில் உள்ள மூன்று பகுதிகளை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவங்களில் பொதுமக்கள் 17 பேர் உயிரிழந்தனர்.
    Next Story
    ×