search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குச்சாவடி
    X
    வாக்குச்சாவடி

    பிரிட்டனை ஆளப்போவது யார்?- 650 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

    பிரிட்டனில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
    லண்டன்:

    ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே செய்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல மந்திரிகள் ராஜினாமா செய்ததால் விரக்தியடைந்த தெரசா மே தனது பிரதமர் பதவியை 24-7-2019 அன்று ராஜினாமா செய்தார்.

    அதன்பின்னர் தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க மறுத்து விட்டதால் எரிச்சலடைந்த அவர், பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்தார். பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் முடிவுக்கு பாராளுமன்றத்துக்கு தொழிலாளர் கட்சி ஒப்புதல் அளித்தது. டிசம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    போரிஸ் ஜான்சன்

    அதன்படி பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை உள்ளூர் நேரப்படி 7 மணிக்கு தொடங்க உள்ளது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள 650 பாராளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். அநேகமாக வெள்ளிக்கிழமை அதிகாலை முடிவுகள் தெரிந்துவிடும். 

    முடிவுகள் அனைத்தும் வெளியானபின்னர், வெற்றி பெற்ற கட்சியின் தலைவர் பக்கிங்காம் அரண்மனையில் ராணியைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர வேண்டும்.

    இந்த தேர்தலில் கன்செர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, தாராளவாத ஜனநாயகவாதிகள், ஸ்காடிஷ் நேஷனல் கட்சி, கிரீன் கட்சி, பிரெக்ஸிட் கட்சி, பிளைட் சிம்ரு ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனினும் பிரதானமான கட்சிகளான கன்சர்வேடிவ், லேபர் ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவுகிறது. 

    பிரச்சார காலத்தின் வெளியான கருத்துகணிப்புகளில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியே தொழிற் கட்சியைவிட கிட்டத்தட்ட 10 புள்ளிகள் அதிகமாக பொதுமக்கள் ஆதரவைப் பெற்று முன்னிலை வகித்ததாக தெரியவந்தது. ஆனால் கடைசி நேரத்தில் வெளியான கருத்துக்கணிப்பில், போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், தொங்கு பாராளுமன்றம் அமையவே வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    பிரிட்டன் நாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது பொதுத்தேர்தலை சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×