search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிலிப்பைன்சை தாக்கிய புயல்
    X
    பிலிப்பைன்சை தாக்கிய புயல்

    பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய டிசோய் புயல் - 4 பேர் பலி

    பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய டிசோய் புயல் காரணமாக பெய்துவரும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் டிசோய் என பெயரிடப்பட்ட சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசும் புயல் காற்றுடன் சேர்ந்து கனமழையும் கொட்டித் தீர்த்து வருவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது.

    டிசோய் புயல் காரணமாக 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், மணிலாவில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு 300-க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியுள்ள புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

    இதையடுத்து, அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பிலிப்பைன்ஸை தாக்கியுள்ள புயல் வரும் வியாழக்கிழமை கரையை கடக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×