search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப்
    X
    டிரம்ப்

    நேட்டோ மாநாட்டில் பங்கேற்க டிரம்ப் பிரிட்டன் பயணம்

    லண்டன் நகரில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று காலை இங்கிலாந்து சென்றார்.
    லண்டன்:

    இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச ராணுவமான ‘நேட்டோ’ படையினர், பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நாடுகளில் அமைதியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த ‘நேட்டோ’ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டில் அறிவித்திருந்தார். ஆனால் அமெரிக்கா பாராளுமன்றத்தில் இந்த மசோதாவிற்கு ஆதரவு கிடைக்கவில்லை.

    இந்நிலையில், லண்டன் மாநகரில் இன்று மற்றும் நாளை (டிசம்பர் 3, 4 தேதி) நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று அதிகாலை அங்கு சென்றார். 

    அதிபர் டிரம்ப் இன்று, நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். நாளை ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் இருதரப்பு சந்திப்பை நடத்த உள்ளார்.

    மேலும், ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் சிரியாவின் நிலைமை குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×