search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிகப்பெரிய மற்றும் சிறிய ரூபிக் கியூப்கள்
    X
    மிகப்பெரிய மற்றும் சிறிய ரூபிக் கியூப்கள்

    உலகிலேயே மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய ரூபிக் கியூப்களை உருவாக்கிய புதிர் ஆர்வலர்

    பிரிட்டனைச் சேர்ந்த புதிர் ஆர்வலர் உலகிலேயே மிகப்பெரிய ரூபிக் கியூபை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
    லண்டன்:

    கன சதுரங்களின்மீது வெவ்வேறு நிறங்களிலான ஸ்டிக்கர்களை ஒட்டி ஹங்கேரியைச் சேர்ந்த கட்டடக் கலைப் பேராசிரியரான எர்னோ ரூபிக் என்பவர் கடந்த 1974-ம் ஆண்டில் கனசதுர (Cube) வடிவிலான ஒரு புதிர் விளையாட்டுப் பொருளை உருவாக்கினார்.

    1979-ம் ஆண்டு நுரெம்பெர்க் விளையாட்டுப் பொருள் கண்காட்சியில் இந்த புதிர் விளையாட்டுப் பொருள் இடம்பெற்றது. எர்னோ ரூபிக் நினைவாக ‘ரூபிக் க்யூப்’ என்ற பெயரில் இந்த விளையாட்டுப் பொருள் கடந்த 1980-ம் ஆண்டு உலகச் சந்தையில் விற்பனைக்கு வந்ததுடன் அதே ஆண்டில் ஜெர்மனி நாட்டின் சிறந்த விளையாட்டுக்கான விருதையும் பெற்றது.

    6 நிறங்களை கொண்ட கனசதுர கட்டங்களையும் முறையாக ஒழுங்குப்படுத்தி ரூபிக் கியூப் புதிரை விடுவிப்பதில் நிமிடங்களையும் கடந்து வினாடிகள் கணக்கில் பல்வேறு உலக சாதனைகள் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இங்கிலாந்தின் இப்ஸ்விட்ச் பகுதியைச் சேர்ந்த டோனி பிஷ்செர்  6 அடி 8 அங்குல உயரத்தில் மிகப்பெரிய ரூபிக் கியூபை உருவாக்கி தனது முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்.

    இதற்கு முன்பு 5 அடி 1.7 அங்குலம் உயரத்தில் ரூபிக் கியூபை உருவாக்கி இவர் கின்னஸ் சாதனை படைத்திருந்தார். அதுமட்டுமின்றி, உலகிலேயே 0.22 அங்குலம் அளவிலான மிகச்சிறிய ரூபிக் கியூபை உருவாக்கி சாதனை படைத்தவரும் டோனிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×