search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகிந்தா ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே
    X
    மகிந்தா ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே

    ராஜபக்சேவுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரித்துவந்த உயர் அதிகாரி ஜெனிவாவுக்கு தப்பி ஓட்டம்

    இலங்கையில் ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரித்துவந்த உயர் அதிகாரி ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் ஜெனிவாவுக்கு தப்பி சென்றுள்ளார்.
    கொழுப்பு:

    இலங்கையில் மைத்திரிபால சிறிசேன 2015 ஆண்டில் அதிபராக பதவி ஏற்ற போது முந்தைய மகிந்த ராஜபக்சே ஆட்சிகாலத்தில் நடந்த ஊழல்கள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணை நிஷாந்த் சில்வா என்ற உயர் அதிகாரியின் தலைமையில் நடைபெற்றுவந்தது. 

    இதற்கிடையில், அந்நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே தனது  சகோதரர் மகிந்தா ராஜபக்சேவுக்கு பிரதமர் பொறுப்பு வழங்கினார்.

    நிஷாந்த சில்வா

    இந்நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற காரணத்தால் ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரித்து வந்த விசாரணைக்குழுவின் தலைவர் நிஷாந்த சில்வா சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகருக்கு தப்பிச்சென்று விட்டதாக இலங்கை ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
    Next Story
    ×