search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப்-இம்ரான்கான்
    X
    டிரம்ப்-இம்ரான்கான்

    ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை: டிரம்ப்-இம்ரான்கான் தொலைபேசியில் ஆலோசனை

    ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் சமாதான நடவடிக்கைகள் தொடர்பாக அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கான், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது, ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் மற்றும் அந்த நாட்டின் ஸ்திரத்தன்மை தொடர்பாக பாகிஸ்தானின் உறுதியான நிலைப்பாட்டை இம்ரான்கான், டிரம்பிடம் தெளிவுபடுத்தினார். அதே போல் 3 ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதிகளால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா பேராசிரியர்களான கெவின் கிங் மற்றும் டிமோதி வீக்ஸ் ஆகியோரை விடுவிக்க உதவியதற்காக இம்ரான்கானுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார்.

    மேலும் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் உறவை பலப்படுத்துவது தொடர்பாகவும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×