search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தபய ராஜபக்சே
    X
    கோத்தபய ராஜபக்சே

    கோத்தபய ராஜபக்சே மீதான ஊழல் வழக்குகள் தள்ளுபடி

    இலங்கை அதிபர் கோத்தபய மீதான ஊழல் வழக்குகள் அனைத்தையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவர் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கி உத்தரவிட்டது.
    கொழும்பு:

    இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் அதிபராக பதவி ஏற்றார். இதைத்தொடர்ந்து மகிந்த ராஜபக்சே இலங்கை பிரதமராக இன்று பதவியேற்றார்.

    டி ஏ ராஜபக்சே நினைவு மற்றும் அருங்காட்சியகத்தை கட்டுவதற்கு பொது நிதியில் ரூ.33.9 மில்லியன் இலங்கை பணம் (சுமார் 185,000 அமெரிக்க டாலர்) முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இந்த வழக்கில் சிக்கிய இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே உள்பட 7 பேர் மீது சிறப்பு உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பயண தடை விதித்தது. 

    தற்போது அதிபராக பதவியேற்றுள்ள நிலையில், கோத்தபய ராஜபக்சே மீதான 33.9 மில்லியன் ரூபாய் மோசடி வழக்குகள் அனைத்தையும் இலங்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த  தடையையும் நீக்கி இன்று உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்ற 6 நபர்கள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 9 அல்லது அதற்கு முன்னர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கும்படி நீதிபதிகள் சம்பத் அபேகூன், சம்பத் விஜரத்னே மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் உத்தரவிட்டனர்.

    கோத்தபய ராஜபக்சே வரும் 29ம் தேதி பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×