search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவுடனான தபால் சேவைகளை மீண்டும் தொடங்கியது பாகிஸ்தான்

    காஷ்மீர் விவகாரம் எதிரொலியாக இந்தியாவுடனான தபால் சேவைகளை நிறுத்திய பாகிஸ்தான் மீண்டும் அதை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    இஸ்லாமாபாத்:

    இந்தியா பாகிஸ்தான் இடையே பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான்,  எல்லைப்பகுதியில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதற்கு தகுந்த வகையில் இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இதற்கிடையே 370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க இந்தியா எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்தியாவுடனான அனைத்து ரீதியிலான உறவுகளை பாகிஸ்தான் குறைத்துக்கொண்டது. இதன் எதிரொலியாக ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியாவுடனான தபால் மற்றும் வான்வெளி சேவைகளையும் பாகிஸ்தான் நிறுத்தியது.

    ‘எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பாகிஸ்தான், தபால் துறையின் கடிதங்களை இந்தியாவுக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டது. பாகிஸ்தானின் இந்த முடிவு சர்வதேச அஞ்சல் தொழிற்சங்க விதிமுறைகளுக்கு முரணானது’ என பாகிஸ்தானின் செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

    இந்நிலையில், இந்தியாவுடன் தபால் சேவைகளை மீண்டும் தொடங்கி கடிதங்களை வழங்குவதற்கான தடையை நீக்கியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், பார்சல் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. 
    Next Story
    ×