search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரன்ட் சைமன்ஸ்
    X
    லாரன்ட் சைமன்ஸ்

    9 வயதில் என்ஜினீயரிங் பட்டம் - உலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்

    பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ் உலகிலேயே இளம் பட்டதாரி என்ற பட்டத்தை பெற உள்ளார்.
    ஐந்தோவன்:

    பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ். தனது 8 வயதிலேயே உயர்கல்வியை முடித்ததற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற லாரன்ட், தற்போது என்ஜினீயரிங் படிப்பையும் முடிக்கும் நிலையில் உள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் என்ஜினீயரிங் படிப்பில் அவர் சேர்ந்திருந்தார்.

    ஆலந்து நாட்டின் ஐந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் அடுத்த மாதம் (டிசம்பர்) பட்டம் பெற இருக்கும் லாரன்ட், உலகிலேயே இளம் வயது பட்டதாரி என்ற சிறப்பை பெற உள்ளார். இவரது நுண்ணறிவு திறன் அளவு (ஐ.கியூ.) 145 அளவுக்கு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

    என்ஜினீயரிங் முடித்த பிறகு இதே பாடப்பிரிவில் ஆய்வு பட்டப்படிப்பில் (பி.எச்.டி.) லாரன்ட் சேர இருப்பதாக கூறிய அவரது தந்தை அலெக்சாண்டர் சைமன்ஸ், அதே நேரம் மருத்துவ பட்டப்படிப்பு ஒன்றையும் அவர் தொடர்வார் என்றும் தெரிவித்தார். லாரன்டின் இந்த அபார திறமையை அவரது தாத்தா-பாட்டிதான் கண்டறிந்ததாக அவரது தாய் லிடியா கூறியுள்ளார்.

    ஐந்தோவன் பல்கலைக்கழகம் இதுவரை பார்த்த மாணவர்களிலேயே மிகவும் புத்திசாலியான நபர் லாரன்ட்தான் என பல்கலைக்கழக இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

    அடுத்த மாதம் தனது என்ஜினீயரிங் பட்டப்படிப்பை முடிக்கும் லாரன்ட், உலகிலேயே இளம் பட்டதாரி என்ற பட்டத்தை மைக்கேல் கியார்னியிடம் இருந்து பெற உள்ளார். அமெரிக்காவின் அலபாமா பல்கலைக்கழகத்தில் இருந்து 10 வயதில் பட்டம் பெற்றவர்தான் இந்த மைக்கேல் கியார்னி என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×