என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஆப்கானிஸ்தான்: தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 போலீஸ் அதிகாரிகள் பலி
Byமாலை மலர்15 Nov 2019 1:17 PM GMT (Updated: 15 Nov 2019 1:17 PM GMT)
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள பாக்லான் மாகாணத்தில் இன்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் மாவட்ட காவல்துறை தலைவர் உள்பட 4 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாக்லான் மாகாணத்தில் இன்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் மாவட்ட காவல்துறை தலைவர் உள்பட 4 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
பாக்லான் மாகாணத்துக்குட்பட்ட தக்ஹார் மாவட்ட காவல்துறை தலைவர் அப்சல் ஹக்கிமி தனது காரில் 3 போலீஸ் அதிகாரிகளுடன் வர்சாஜ் மாவட்டத்தை நோக்கி இன்று சென்றுக் கொண்டிருந்தார்.
ஜால்கா அருகாமையில் உள்ள கோட்டால்-இ-பல்பி என்ற இடத்தில் அவரது காரை வழிமறித்த தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
இதில் அப்சல் ஹக்கிமி உள்பட 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Next Story
×