search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரை படம்.
    X
    வரை படம்.

    இந்து கோவில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு

    இந்து கோவில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
    இஸ்லாமாபாத்,

    வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் மாவட்டத்தில் பாரிகோட் தெஹ்ஸிலில், பாகிஸ்தான் மற்றும் இத்தாலியை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூட்டு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவர்கள்  3000 ஆண்டுகள் பழமையான நகரத்தை கண்டுபிடித்து உள்ளனர்.  அந்த நகரத்தின் பெயர் பஜீரா. இது  5,000 ஆண்டுகள் பழமையான நாகரீகத்திற்கும், கலைப்பொருட்களுக்கும் புகழ் பெற்றது ஆகும்.

    இந்த கண்டுபிடிப்பில் இந்து கோவில்கள், நாணயங்கள், ஸ்தூபம், பானைகள் மற்றும் அந்தக் காலத்தின் ஆயுதங்கள் உள்ளன.

    கிமு 326ல் அலெக்சாண்டர் தனது படையுடன்  பாகிஸ்தானின் ஸ்வாட்டுக்கு வந்து ஓடிகிராம் பகுதியில் நடந்த போரில் எதிரிகளை தோற்கடித்து பஜீரா என்ற சுவர் நகரத்தையும், ஒரு கோட்டையையும் கட்டினார் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

    அலெக்சாண்டரின் காலத்திற்கு முன்பே அந்த நகரத்தில் மனித வாழ்க்கையின் தடயங்களையும் நிபுணர்கள் கண்டறிந்து உள்ளனர். அலெக்சாண்டருக்கு முன்பு, இந்தோ-கிரேக்கம், புத்மத், இந்து ஷாஹி மற்றும் இஸ்லாமை பின்பற்றுபவர்கள் அந்த நகரத்தில் வசித்து வந்து உள்ளனர்.
    Next Story
    ×