search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகிச்சை பெற்று வரும் விஜேரத்ன
    X
    சிகிச்சை பெற்று வரும் விஜேரத்ன

    இலங்கையில் எழுத்தாளருக்கு கத்திக்குத்து- வீடு புகுந்து தாக்கிய மர்ம நபர்கள்

    இலங்கையில் எதிர்க்கட்சி வேட்பாளரை விமர்சித்து புத்தகம் வெளியிட்டவரை மர்ம மனிதர்கள் நேற்று அவரது வீட்டிற்குள் புகுந்து கத்தியால் குத்தினர்.
    கொழும்பு: 

    இலங்கையின் தற்போதைய அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 9-ந்தேதி முடிகிறது. இதையொட்டி, அங்கு  அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. 

    இந்த தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில்  போட்டியிடுகிறார். ஐக்கிய தேசிய கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசா (52) போட்டியிடுகிறார்.  மொத்தம், 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தபோதிலும், இவர்கள் இருவருக்குமிடையே கடும் போட்டி உள்ளது. 

    இந்நிலையில், எதிர்க்கட்சியின் முக்கிய வேட்பாளரை விமர்சித்து புத்தகம் வெளியிட்ட லசந்தா விஜேரத்ன என்ற எழுத்தாளரை மர்ம  மனிதர்கள் நேற்று கத்தியால் குத்திவிட்டு தப்பினர். 

    லசந்தா விஜேரத்ன கடந்த வாரம் 'தேவையற்ற வளர்ச்சி மற்றும் ஊழல்' என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில் ஒரு பிரதியை ஆளும்  கட்சி வேட்பாளரான சஜித் பிரேமதாசாவிடம் கொடுத்தார்.  

    இதனையடுத்து நேற்று அதிகாலையில் அவரது வீட்டை உடைத்து மர்ம மனிதர்கள் உள்ளே நுழைந்தனர். அவரது மனைவி தலையில்  துப்பாக்கியை வைத்து கொன்றுவிடுவதாக மிரட்டினர். பின்னர் விஜேரத்னவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்.  

    இந்த தாக்குதலுக்கு அரசியல் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

    ‘எங்கள் கட்சி நேர்மையான கட்சி. அவர் மீதான இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்’ என ராஜபக்சே கட்சியின்  செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    விஜேரத்ன தற்போது மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகிறார். இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×