என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையால் பீதி
Byமாலை மலர்15 Nov 2019 6:56 AM GMT (Updated: 15 Nov 2019 6:56 AM GMT)
இந்தோனேசியாவின் மொலுக்காஸ் தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
ஜகார்தா:
இந்தோனேசியாவின் மொலுக்காஸ் தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேற்று இரவு 9.47 மணிக்கு கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் சுலவேசி தீவிலும் உணரப்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுக்கு நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் கூறி உள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆழிப்பேரலைகள் எழும் என்ற அச்சத்தின் காரணமாக இந்தோனேசிய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதன் ஒரு பகுதியாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மனோபா நகரில் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டனர். ஆஸ்பத்திரிகளில் இருந்த நோயாளிகளும் உடனடியாக அங்கிருந்து வெளியேறி சாலைகளுக்கு வந்தனர்.
பின்னர் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. சுலவேசி தீவுகளில் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக, இந்தியாவின் அந்தமான், நிக்கோபர் தீவுகளில் நள்ளிரவில் 5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

Next Story
×