
பாகிஸ்தான் ராணுவ தளபதியாகவும், பின்னர், அதிபராகவும் இருந்தவர் முஷரப். இவர், 2015-ம் ஆண்டு அளித்த ஒரு பேட்டியின் வீடியோவை குவெட்டா நகரைச் சேர்ந்த ஹமீது மன்டோகைல் என்பவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டார். உடனே பலரும் பகிர்ந்ததால், அந்த வீடியோ ‘வைரல்’ ஆனது.
அதில், முஷரப் கூறியிருப்பதாவது:-
காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வருபவர்களுக்கு அமோக வரவேற்பு அளித்தோம். அவர்களுக்கு பயிற்சி அளித்து அனுப்பி வைப்பது வழக்கம். அவர்கள் இந்திய ராணுவத்துடன் போரிடுவார்கள். அவர்களை போராளிகளாக கருதுகிறோம். அவர்கள் எங்கள் ஹீரோக்கள். பின்னாளில், லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்கள் தலையெடுத்தன.
1979-ம் ஆண்டு, சோவியத் படைகளை விரட்டுவதற்காக, ஆப்கானிஸ்தானில் மத போராளிகளை பாகிஸ்தான் அறிமுகப்படுத்தியது. உலகம் முழுவதும் இருந்து முஜாகிதீன்களை கொண்டு வந்து பயிற்சி அளித்து ஆயுதங்களை கொடுத்தோம். அவர்களும் எங்கள் ஹீரோக்கள்தான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.