search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப்
    X
    டிரம்ப்

    முன்னாள் துணை ஜனாதிபதி மீது அவதூறு: டிரம்ப் மீதான விசாரணை தொடங்கியது

    அமெரிக்காவில் முன்னாள் துணை ஜனாதிபதி குறித்து அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்டதாக அதிபர் டிரம்ப் மீதான விசாரணை தொடங்கியது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டெனால்டு டிரம்ப் இருக்கிறார். அங்கு அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 3-ந்தேதி நடக்கிறது.

    இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிட முயற்சித்து வருகிறார். எதிர்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோபிடன் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் ஜோபிடன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் டிரம்ப் திட்டமிட்ட தகவல் வெளியாகி இருந்தது.

    ஜோபிடன் மற்றும் அவரது மகன் ஹன்ட்டர்ஸ் குறித்து அவதூறு பரப்ப உதவுமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு நெருக்கடி கொடுத்ததாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. உக்ரைன் அதிபருடன் அவர் தொலைபேசியில் பேசிய விவரத்தை அமெரிக்க அதிபர் மாளிகையைச் சேர்ந்த ஒருவர் பகிரங்கமாக அம்பலப்படுத்தினார்.

    இதையடுத்து டிரம்ப்புக்கு எதிராக ஜனநாயக கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. பாராளுமன்ற உளவு கமிட்டி இதன் மீதான விசாரணையை தொடங்கியது.

    முதல் முறையாக இந்த விசாரணை டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பானது.

    Next Story
    ×