search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேஸ்புக்
    X
    பேஸ்புக்

    பேஸ்புக்கில் போலி கணக்குகள் இத்தனை கோடியா?

    பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் கோடிக்கணக்கான போலிக்கணக்குகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
    சான் பிரான்சிஸ்கோ:

    இன்று ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பேஸ்புக் முக்கிய அங்கமாகி விட்டது என்றால் அது மிகையாகாது. பேஸ்புக் உபயோகிப்பதால் நமக்கு பலவிதமான நன்மைகளும் சில தீமைகளும் ஏற்படுகின்றன. 

    வேலை இல்லாதவர்கள் பேஸ்புக் மூலம் வேலை பெற்றிருக்கிறார்கள். பேஸ்புக்கில் நண்பர்களாகி பின், காதலர்களாகி  திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் ஏராளம் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் பேஸ்புக்கினால் வேலை இழந்தவர்களும், வாழ்க்கையை இழந்தவர்களும், விவாகரத்துப் பெற்றவர்களும் இருக்கின்றார்கள் என்பதையும் மறுக்க இயலாது.

    பேஸ்புக்கில் போலிக்கணக்குகள் உருவாக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இவற்றின் மூலம் வரும் தீமைகள் ஏராளம். போலிக்கணக்குகள் ஆரம்பித்து அதன் மூலம் ராணுவ ரகசியங்கள் கடத்தப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

    இந்நிலையில், பேஸ்புக்கில் இந்த ஆண்டு 540 கோடி போலிக்கணக்குகளை தடை செய்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    ‘போலியான மற்றும் தவறான கணக்குகளை உருவாக்குவதற்கான முயற்சிகளைக் கண்டறிந்து தடுக்கும் திறனை நாங்கள் மேம்படுத்தியுள்ளோம். இந்த கண்டறிதல் முறைகள் மூலம் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான போலிக் கணக்குகள் உருவாக்கம் தடுக்கப்படுகிறது’, என அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×