search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவி
    X
    கொலை செய்யப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவி

    பாகிஸ்தானில் இந்து மருத்துவ மாணவி கற்பழித்து கொலை

    பாகிஸ்தானில் இந்து மருத்துவ மாணவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், முன்னதாக அவர் கற்பழிக்கப்பட்டதும் பிரேதபரிசோதனையில் தெரியவந்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவி நிம்ரிதா சாந்தனி (வயது 25). இந்து மதத்தை சேர்ந்த இவர் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி கல்லூரி விடுதி அறையில் பிணமாக கிடந்தார். நிம்ரிதா சாந்தினி துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கல்லூரி நிர்வாகம் கூறியது. பிரேத பரிசோதனை அறிக்கையும் இது தற்கொலை என கூறியது.

    ஆனால் நிம்ரிதா சாந்தனி தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை என்றும் இது கொலையாகத்தான் இருக்குமென்றும் மாணவியின் உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் போலீசார் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என கூறி போராட்டம் வெடித்தது. அதனை தொடர்ந்து மருத்துவ மாணவியின் மர்மசாவு குறித்து நீதி விசாரணை நடத்த சிந்து மாகாண ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி நிம்ரிதா சாந்தனியின் உடல் மீண்டும் பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    இதில் நிம்ரிதா சாந்தினி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், முன்னதாக அவர் கற்பழிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ள நிலையில் கொலையாளி யார் என்பதை கண்டறிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
    Next Story
    ×