search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இம்ரான் கான்
    X
    இம்ரான் கான்

    பதவி விலகுவதை தவிர பிற கோரிக்கைகளை ஏற்கிறேன் - இம்ரான் கான்

    பதவி விலகுவதை தவிர எதிர்க்கட்சிகளின் நியாமான கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். அந்த தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக ஜாமியக் உலேமா-இ- இஸ்லாம் பசல் (ஜே.யு.ஐ.-எப்) கட்சி தலைவரும், மதகுருவுமான மவுலானா பஷ்லூர் ரஹ்மான் குற்றம்சாட்டி வருகிறார்.

    திறமையின்மை, மோசமான நிர்வாகம் காரணமாக மக்களின் கஷ்டம் அதிகரித்துவிட்டது. அவர் தொடர்ந்து பதவியில் நீடித்தால் பாகிஸ்தானின் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும். எனவே அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என இஸ்லாமாபாத்தில் எதிர்க்கட்சிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    இம்ரான்கானின் திறமையைற்ற நிர்வாகத்தின் காரணமாக பாகிஸ்தான் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும். எனவே இம்ரான்கான் உடனே பதவி விலக வேண்டும் என்று கூறி அவருக்கு 48 மணி நேரம் கெடுவும் விதித்தனர். 

    இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில் எதிர்க்கட்சிகளின் ராஜினாமா கோரிக்கையைத் தவிர பிற கோரிக்கைகளை ஏற்பதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

    எதிர்க்கட்சித் தலைவர்களுடனான இம்ரான் கானின் இந்தச் சந்திப்பு குறித்து பாதுகாப்புத் துறை மந்திரி பர்வேஸ் கட்டாக் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

    “எதிர்க்கட்சிகளின் பல முக்கியமான கோரிக்கைகளை அரசு எற்றுக்கொண்டது. ராஜினாமா கோரிக்கையைத் தவிர, மீதமுள்ள கோரிக்கைகள் குறித்து இரு தரப்புத் தலைவர்களும் கலந்தாலோசித்து வருகிறார்கள். பேச்சுவார்த்தை தொடரும்” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

    எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கைகளில் இம்ரான் கானின் ராஜினாமா மற்றும் மறு தேர்தலை முக்கியக் கோரிக்கையாக முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×