search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்
    X
    கார்

    மகன் ஓட்டிய கார் தாயின் உயிரை பறித்தது

    காரை நிறுத்துவதற்கு ‘பிரேக்’கை அழுத்துவதற்கு பதில் தவறுதலாக ‘ஆக்சிலரேட்டரை’ அழுத்தியதால் மகன் ஓட்டிய கார் தாயின் உயிரை பறித்தது.
    துபாய்

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாவில் உள்ள முவைலா நகரில் வசிந்து வந்த இந்திய பெண் அல் காசிமி. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவருக்கு திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளனர். 17 வயதான இவரது மூத்த மகன் அங்கு பிளஸ் 2 படித்து வருகிறான். ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான வயது தகுதியை இன்னும் அடையாத நிலையில் அந்த சிறுவன் ஷார்ஜாவில் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தான்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த சிறுவன் தனது தாயை அழைத்து வருவதற்காக அருகில் உள்ள பூங்காவுக்கு காரில் சென்றான். அப்போது சிறுவன் காரை நிறுத்துவதற்கு ‘பிரேக்’கை அழுத்துவதற்கு பதில் தவறுதலாக ‘ஆக்சிலரேட்டரை’ அழுத்திவிட்டான்.

    இதனால் பூங்காவுக்கு வெளியே அமர்ந்திருந்த சிறுவனின் தாய் அல் காசிமி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் அவர் மகனின் கண் முன்னே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதேபோல் துபாயின் ஜெபல் அலி நகரில் ஆப்பிரிக்காவை சேர்ந்த வாலிபர் தனது காரை பின்னோக்கி இயக்கியபோது காருக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த இந்திய பெண்ணும், அவரது 4 வயது பெண் குழந்தையும் சக்கரத்தில் சிக்கினர். இதில் அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. குழந்தையின் தாய் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
    Next Story
    ×