search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி - ஆங் சான் சூகி சந்திப்பு
    X
    பிரதமர் மோடி - ஆங் சான் சூகி சந்திப்பு

    மியான்மர் ஆளும் கட்சி தலைவர் ஆங் சான் சூகியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

    தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி மியான்மர் நாட்டு ஆளும் கட்சி தலைவர் ஆங் சான் சூகியை சந்தித்துப் பேசினார்.
    பாங்காங்:

    இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் இன்று தொடங்கியது. மேலும், 14-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு, 3-வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இவற்றில் பங்கேற்க பிரதமர் மோடி தனி விமானத்தில் தாய்லாந்து சென்றார்.

    பாங்காக் வந்தடைந்த பிரதமர் மோடியை தாய்லாந்தில் வாழும் இந்தியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அங்கு ‘தாய்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும், குருநானக்கின் 550-வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

    இதற்கிடையே, இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் இன்று காலை தொடங்கியது. மாநாட்டில் பிரதமர் மோடி தொடக்க உரையாற்றினார். மேலும், தாய்லாந்து பிரதமர் சான்-ஓ-சா மற்றும் இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோ ஆகியோரை தனித்தனியாக சந்தித்தார்.

    இந்நிலையில், ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள மியான்மர் நாட்டு ஆளும் கட்சி தலைவர் ஆங் சான் சூகியை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியாவுடனான பல்வேறு தரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
    Next Story
    ×